சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து முதன்முதலாக நடித்திருக்கும் 'மகான்' தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'ஜகமே தந்திரம்'  படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மகான்'. 

இந்த திரைப்படத்தில் சீயான் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணிபோஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் இடம்பெற்ற 'சூறையாட்டம்... எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடலாசிரியர் முத்தமிழ் எழுதியிருக்கும் இந்த பாடலை பின்னணி பாடகர் வி எம் மகாலிங்கத்துடன் இணைந்து சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கிறார்.

'சூறையாட்டம்..' எனத் தொடங்கும் பாடலில் லிரிகல் வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்களுடன் சீயான் விக்ரம் தோன்றுவதால் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சீயான் விக்ரமின் 'மகான்' தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளிக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படமும், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படமும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுடன் சீயான் விக்ரம் நடிப்பில் உருவான 'மகான்' படமும் இணைவதால் இரசிகர்களுக்கு தீபாவளி விருந்து மும்மடங்கு தித்திப்பை அளிக்கும் என திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.