திலீபனுக்கு நினைவேந்தல் : கைதான கஜேந்திரன் உள்ளிட்டோர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு

Published By: Digital Desk 4

23 Sep, 2021 | 06:16 PM
image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வாக்கு மூலங்கள் பெறப்பட்ட பின்னர் , அவர்களை பொலிஸ் பிணையில் விடுவித்த யாழ்ப்பாண பொலிஸார் , அவர்களுக்கு எதிராக எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை  கைது செய்யும் நோக்குடன் இன்று வியாழக்கிழமை முதல்  பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது, அதற்கு பொலிஸார் தடை விதித்தனர். 

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று வாக்கு மூலம் பெற்ற பின்னரே பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

அதேவேளை யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27