நீண்ட காலமாக இருந்துவரும் இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்க இலங்கையின் பிரதிநிதி குழுவொன்று இந்தியா செல்லவுள்ளது.

இதனை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர்  மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 இலங்கையின் பிரதிநிதி குழு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்தியா செல்லவுள்ளது. குறித்த விஜயத்தின் போது இந்தியாவின் உயர் அரச பிரமுகர்கள் மற்றும் இந்திய மீனவப் பிரதிநிதிகள் ஆகியோருடன் சந்திப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதன் போது நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் இலங்கை - இந்திய  மீனவர்களின் பிரச்சினைகளுக்கான இறுதித்தீர்மானம் எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.