(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை ஒத்த தாக்கதல்கள் இடம்பெறலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ள விடயம் குறித்து  அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலை போன்ற தாக்குதல்கள் இடம்பெறலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர்இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் குறித்து உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இதனை அலட்சியப்படுத்தினால் ஒரு வேளை அவர் குறிப்பிட்டதை போன்று தாக்குதல் இடம் பெற்றால் அவரும் தற்போது பேராயர் நல்லாட்சி அரசாங்கத்தை சாட்டுவதை போன்று தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்துவார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு ஒப்பந்தம் பலப்படுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதி விடுதலை புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிப்பதற்கு முன்னின்று செயற்பட்டார். 

சிங்களம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்திற்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க எதிர்தரப்பின் முக்கிய தரப்பினர் கத்தோலிக்க சபையின் ஒரு சிலருடன் ஒன்றினைந்து செயற்படுகிறார்.அனைத்து சூழ்ச்சிகளையும் எம்மால் சிறந்த முறையில் வெற்றிக் கொள்ள முடியும்.என்றார்.