வரதட்சணை வாங்கினால் " பட்டம் " பறிக்கப்படும்  

Published By: Digital Desk 2

23 Sep, 2021 | 04:36 PM
image

குமார் சுகுணா 

நாம் இந்த பூமியில் பிறக்கிறோம் .. வாழ்கின்றோம்... இறக்கிறோம். யாரும் இங்கு நிரந்தரமாக தங்கிவிட முடியாது. ஆனால் பலர் இந்த அண்ட சராசரங்கள் அனைத்தும் தன்னுடையது என்ற எண்ணத்தோடு வாழ்ந்து இறுதியாக வாழ்ந்தும் வாழாமலும் மாண்டு போகின்றனர். 

அவர்களுக்கு  இறுதியில் எதுவும் மிஞ்சப்போவதில்லை. தங்களுக்கு மட்டும் அல்ல பலர்,  மற்றவர்களுக்கும் துன்பத்தை விளைவித்து விடுகின்றனர். மிக சிறியதான இந்த வாழ்க்கையில் தானும் மகிழ்வின்றி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுக்காமல் போய்விடுகின்றனர். இப்படி மற்றவர்களை துன்புறுத்தும் பல வழிகளில் ஒன்றுதான் வரதட்சணை.

இருப்பவன் இல்லாதவனுக்கு கொடுக்கலாம். தனது பெண் பிள்ளைகளை இன்னொரு வீட்டுக்கு  திருமணம் முடித்து கொடுக்கும் போது சீர் செய்யும் முறைதான் வரதட்சணை. தங்களது தகுதிக்கு ஏற்றால் போல ஒரு வரனை பார்த்து நமது தகுதிக்கு ஏற்ப மன நிறைவோடு இந்த சீர்வரிசை செய்யப்படுவது வழமை. ஆனால். இன்றைய காலத்தில் வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கிறது. இது சீர், செய்முறை, சீதனம் போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த சீரை பெண் வீட்டார் வசதியில்லாத போதிலும்  கட்டாயம் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத விதி பரவலாக உள்ளது. 

இதன் உச்சக்கட்டம் கொலை,  தற்கொலை வரை செல்கிறது. நாம் வாழ்கையில்  மகிழ்வுடன் வாழ இன்னொருவரிடம் இருந்து பெறும்  இந்த சுரண்டல் முறையால்  நம்மை சூழ நடைபெறும் உயிரிழப்புகளை நாமும் எளிதாக கடந்து சென்று விடுகின்றோம். இதனால்தான் காலம் காலமாக வரதட்சணை மூலமான மரணங்கள் தவிர்க முடியாததாக உள்ளன.  இந்நிலையில் இதனை நிறத்தும் முயற்சி ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கேரளாவில் வரதட்சணை கொடுமையின் காரணமாக பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனையடுத்து வரதட்சணை கொடுமையைக் கட்டுப்படுத்த கேரள அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுவதற்கு முன் மாணவர்கள், `வரதட்சணை கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம்' என உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கபட்டுள்ளது. மேலும், அதை மீறுபவர்களின் கல்வித் தகுதி இரத்து செய்யப்படும் என்றும் உறுதிமொழிப் பத்திரம் எச்சரிக்கிறது.

வரதட்சணைக் கொடுமையால் கடந்த  5 ஆண்டுகளில் 66 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் கேரளாவில் வரதட்சணை கொடுமையின் காரணமாகப் பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதனையடுத்து வரதட்சணைக் கொடுமையைக் கட்டுப்படுத்த கேரள அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கேரளாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் `வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்' என்று உறுதிமொழி ஏற்ற பின்னரே மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் அளிக்கப்படும் என்ற விதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கோழிக்கோடு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் 391 கல்லூரிகளில் பல மாணவர்கள் இந்த உறுதிமொழியை ஏற்ற பின்னரே பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். முன்னதாக, கடந்த வாரத்தில் கேரளாவின் மீன்வளம் மற்றும் கடல் சார் பல்கலைகழகத்தில் 386 மாணவர்கள் இதுபோன்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 முன்னதாக, ஜூலை மாதம் கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகமது கான் இந்த யோசனையைக் கூறியிருந்தார். சில நாட்கள் கழித்து கேரள அரசும் அதனை ஏற்றுக் கொண்டதால், தற்போது பல்கலைக்கழகங்களில் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

 மாணவர்கள்கள் தான் நமது நாளைய சமூகம் . அந்தவகையில்  காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த விடயங்கள் மாற வேண்டுமாயின் அவர்களிடம் இருந்துதான் மாற்றம்  ஏற்படுத்த வேண்டும். என்றவகையில் கேரளாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறை வரவேற்கத்தக்கதே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து புதிய அரசாங்கம்...

2024-10-11 14:49:54
news-image

இலங்கையில் தேர்தல்கள் - முக்கிய அம்சங்கள்

2024-10-09 15:56:40
news-image

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில்...

2024-10-09 15:16:10
news-image

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

2024-10-09 15:10:57
news-image

தரமற்ற மருந்துகளின் தாக்கமும், கொள்முதல் சட்டத்திற்கான...

2024-10-09 12:56:00
news-image

ஷேய்க் ஹசீனாவை நாடுகடத்த முடியுமா?

2024-10-07 13:14:08
news-image

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராவதில் தடுமாறும் எதிரணிக்...

2024-10-07 12:57:19
news-image

பாரம்பரிய கட்சிகளை தண்டித்த வாக்காளர்கள்

2024-10-06 19:15:50
news-image

பேராபத்துக்குள் தமிழ்த் தேசியம்

2024-10-06 17:14:44
news-image

தமிழ் அரசுக் கட்சியுடன் பயணிப்பதில் அர்த்தமில்லை...

2024-10-06 18:31:52
news-image

தமிழ் மக்களுக்கான அரசியல் நியாயப்படுத்தலும் தீர்வுகளும்

2024-10-06 18:42:06
news-image

புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா வடக்கு...

2024-10-06 15:55:39