பங்களாதேஷ் தலைநகரிலுள்ள வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்ததால் பரபரப்பு 

Published By: MD.Lucias

16 Sep, 2016 | 11:37 AM
image

பங்­க­ளா­தேஷின் டாக்கா நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கடும் மழை­வீழ்ச்­சி­யை­ய­டுத்து அந்­ந­கரின் வீதி­க­ளிலும் கார் தரிப்­பி­டங்­க­ளிலும் இரத்த வெள்ளம் பாய்ந்­ததால் பிர­தே­ச­வா­சிகள் பெரும் திகைப்­புக்­குள்­ளா­ன­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

தியாகத் திரு­நா­ளான ஹஜ் பெரு­நா­ளை­யொட்டி அந்­ந­கரின் சில பிர­தே­சங்­களில் செம்­ம­றி­யா­டுகள், ஆடுகள் மற்றும் மாடுகள் உள்­ள­டங்­க­லான கால்­ந­டைகள் பெரு­ம­ளவில் பலி கொடுக்­கப்­பட்­டி­ருந்­ததால் அந்தக் கால் நடை­களின் குருதி வெள்ள நீரில் கலந்த தாலேயே இவ்வாறு வீதிகளில் இரத்த வெள்ளம் பாய்ந்துள்ளது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்