பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

By Vishnu

23 Sep, 2021 | 02:06 PM
image

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நேற்று (22) தனது கையொப்பத்தையிட்டு அதனை சான்றுரைப்படுத்தினார். 

May be an image of text that says 'PARLIAMENT OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA CONSUMER AFFAIRS AUTHORITY (AMENDMENT) BILL to amend the Consumer Affairs Authority Act, No. f2003 Presented by the Minister of Trade on 06th of September 2021 (Published in the Gazette on August 19, 2021) Ordered by Parliament to be printed'

இந்தச் சட்டமூலம் நேற்று (22) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டது.

வர்த்தக அமைச்சரினால் 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 06 ஆம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் 2021 ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டிருந்தது. 

இதற்கமைய 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்கப் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டம் நேற்று முதல் (22) நடைமுறைக்கு வருகிறது.

இந்தத் (திருத்தச்) சட்டமூலம், மூலம் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்படும்.

அதன்படி, தனி வர்த்தகம், நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளாக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வர்த்தகங்கள் தொடர்பிலும் இதுவரை விதிக்கப்பட்டு வந்த அபராதம் திருத்தம் செய்யப்படவுள்ளது. 

மேலும், இது தொடர்பில் ஒரு நீதிவான் முன்னிலையில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்குப் பின்னர், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்கள் மீது இந்த அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47
news-image

நாடாளுமன்றத்தை கைப்பற்ற இரகசிய திட்டம் தீட்டிய...

2022-09-29 11:23:39
news-image

கஜிமாவத்தை தீ பரவல் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணங்களை...

2022-09-29 11:17:21
news-image

ரணில் அரசாங்கத்தின் ஆயுட்காலம் கடவுளுக்கே தெரியும்...

2022-09-29 11:15:02
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-29 10:58:31
news-image

அரசாங்கத்தில் பொருளாதார குற்றவாளிகள் இருக்கும் வரை...

2022-09-29 11:25:30
news-image

அல்குர் ஆன், நபியை அவமதிக்கும் கருத்து...

2022-09-29 10:50:28
news-image

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்

2022-09-29 12:43:37
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனகவுக்கு எதிரான...

2022-09-29 09:59:00
news-image

சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளதேசிய சபையில் இணையப்போவதில்லை...

2022-09-29 10:48:15
news-image

கோட்டாவை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

2022-09-29 09:14:37