தென்னிந்தியாவின், திருச்சி மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளில் சுமார் 29 பேர் கடந்த மாதம் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

The Sri Lankan Tamil detainees who tried to take their own lives at an Indian refugee camp [J Jayabathuri/Al Jazeera]

தமிழ்நாட்டின் திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் ஆகஸ்ட் 18 அன்று 17 கைதிகள் பல வழிமுறைகளை பயன்படுத்தி தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றனர்.

அந்த சம்பவத்தின் இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேலும் 12 கைதிகள் இவ்வாறான தற்கொலை முயற்சிகளை முன்னெடுத்தனர்.

எனினும் அதிர்ஷ்டவசமாக இரு சம்பவங்களிலும் எவரும் உயிரிழக்கவில்லை.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது.

இங்கு பல்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த 60 க்கும் மேற்பட்டோர் மற்றும் பங்களாதேஷ், நைஜீரியா, சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் என 100 க்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். 

இந் நிலையில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தங்களை தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர் என்றும், பிணையில் வெளி வந்தவர்களையும் கைது செய்துள்ளனர் என்றும் இலங்கை அகதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் கொரோனா காலத்திலாவது எங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தியும் வருகின்றனர்.