காலி, ஹபராதுவ பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கடலோரப் பகுதியில் நேற்று வெளிநாட்டு பிரஜையொருவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டவர் செப்டெம்பர் 06 ஆம் திகதி இலங்கைக்கு வந்து மிரிசவில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 41 வயதான உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதுடன், இது தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.