மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஒருசில கொழும்பு வாழ் மக்களின் அக்கறையற்ற செயற்பாடு, ஏனையவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது அவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவோ அமையக்கூடாது.
சுதத்தமும் சுகாதாரமும் ஒரு மனிதனின் முக்கியமான அம்சமாகும். நோய் நொடியின்றி வாழ ஒரு மனிதனுக்கு இந்த இரண்டும் முக்கிய பங்கை வகிக்கின்றன.
அந்தவகையில் ஒவ்வொருவரும் சுகாதார முறைப்படி வாழ்வதுடன் தமது வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைககளில் இருந்து வரும் கழிவுப் பொருட்களை உரிய முறையில் நகரசபை அல்லது பிரதேசசபை ஊழியர்களிடம் உரியவாறு ஒப்படைத்து தாம் வாழும் சுற்றுச் சூழலை பாதுகாத்து தம்மையும் பிறரையும் வைரஸ் கிருமிகள் மற்றும் டெங்கு போன்ற கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
தலைநகர் கொழும்பில் நாளாந்தம் நகரைச் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு மனிதன் பாவித்துவிட்டு வீசும் கழிவுப்பொருட்கள் கழிவு நீர்க் குழாய்களை அடைப்பதால் பாரிய இடஞ்சல்களை ஏற்படுத்துகின்றது.
கொழும்பின் சகல அசுத்த நீர்களும் நிலக்கீழ் குழாய்கள் மூலமே அகற்றப்படுகின்றன. இவ்வாறான நிலக்கீழ் குழாய்களுக்கு செல்லும் நீரில் அதிகமானவர்கள் பொறுப்பற்ற விதத்தில் பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள், உடைந்த பிளாஸ்ரிக் பாவனைப் பொருட்கள், யோகட் கப்கள், மதுபானப் போத்தல்கள், பாவிக்கப்பட்ட ஆடைகள் என அதிகமான கழிவுப் பொருட்களை தத்தமது இடங்களில் உள்ள நிலக்கீழ் குழாய்களுக்குள் பொறுப்பற்ற விதத்தில் போடுகின்றனர்.
இதன் காரணமாக நிலக்கீழ் குழாய்கள் குறித்த கழிவுப் பொருட்களால் அடிக்கடி அடைப்பெடுத்து கழிவு நீர் பாதையோரங்களிலும், மக்கள் நடமாடும் பகுதிகளிலும் மேல் எழுவதால் டெங்கு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாக வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இப்பொருட்கள் நிலத்திற்கு கீழ் அடைப்பதால் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பாரிய பிரயத்தனத்துக்கு மத்தியில் அவற்றை அகற்ற வேண்டிய நிலைமைகள் ஏற்படுகின்றன.
சுத்திகரிப்புத் தொழிலாளர்களாகிய நாமும் சாதாரண மனிதர்கள் தானே என்ற உணர்வாவது மக்கள் மத்தியில் வரவேண்டும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மனித நேயம் கொண்டவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் விடயத்தில் அவதானமாக இருந்து பொலிஸாரிடமாவது அவர்களின் குற்றச் செயல்களை தெரிவித்து மேற்படி தவறான செயல்களை செய்யாது தடுக்க முன்வர வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM