கார் ஆச­னத்தில் மின்­னேற்­றப்­பட்டுக் கொண்­டி­ருந்த கைய­டக்­கத்­தொ­லை­பேசி வெடித்­ததால் அந்தக் கார் முழு­மை­யாக தீப்­பற்றி எரிந்து கரு­கிய விப­ரீத சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் போர்ட் சென். லூசி எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பிர­பல தென் கொரிய பல்­தே­சிய கம்­ப­னி­யொன்­றினால் தயா­ரிக்­கப்­பட்டு சந்­தைப்­ப­டுத்­தப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சியே இவ்­வாறு வெடித்து தீப்­பற்றி எரிந்­துள்­ளது.

அந்தக் கம்­பனி மேற்­படி புதிய ரக கைய­டக்கத் தொலை­பே­சிகள் தீப்­பற்றி எரியும் வாய்ப்­புள்­ளன என எச்­ச­ரித்து அவற்றைப் பயன்­ப­டுத்த வேண்டாம் என பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­றுத்தி அந்த தொலை­பே­சி­களை மீளப் பெறும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்த மாத ஆரம்­பத்தில் அமெரிக்க அதிகாரிகள் அந்த ரக கையடக்கத் தொலைபேசிகளை விமானங்களில் பயன் படுத்துவதற்கு தடைவிதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.