நாடு முழுவதும் நேற்று மொத்தமாக 2,28,645 கொரோனா தடுப்பூசி நிர்வாகிப்புகள் இடம்பெற்றுள்ளன.

கோவிஷில்ட் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 33,462 நபர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது, இரண்டாவது டோஸ் 777 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சீனோபார்ம் தடுப்பூசியின் முதல் 1,22,165 நபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 31,931 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 37,234 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

பைசர் தடுப்பூசியின் முதல் 421 நபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 89 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

மொடர்னா தடுப்பூசியின் முதல் 2346  நபர்களுக்கும் அதன் இரண்டாவது டோஸ் 220 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை நாடு முழுவதும் இன்று மொத்தம் 415 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

இது தவிர இலங்கை இராணுவத்தினரால் இயக்கப்படும் பல நடமாடும் தடுப்பூசி நிலையங்களும் செயலில் உள்ளன.

23.09.2021 செயலில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்