74 ஆவது சுதந்திர தின விழா ஒழுங்குபடுத்தலுக்காக அமைச்சரவை உபகுழு

By Digital Desk 2

23 Sep, 2021 | 11:07 AM
image

எம்.மனோசித்ரா

எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள 74 ஆவது சுதந்திர தின விழாவுக்கான ஒழுங்குபடுத்தல்களுக்குத் தேவையான வழிகாட்டல்களுக்காக அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நியமிக்கப்படவுள்ள இந்த குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கத்துவம் வகிப்பார்.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே , அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் , சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழஹப்பெரும, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right