இலங்கையர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றியமைக்கான காரணத்தை பாராளுமன்றில் தெரிவித்தார் செல்வம்

By Digital Desk 2

23 Sep, 2021 | 10:45 AM
image

 

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

 சீனாவை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெருமளவான இலங்கையர்களுக்கு சீனத்தயாரிப்பான  சினோபார்ம் கொரோனா  தடுப்பூசியை  அரசு ஏற்றுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்)சட்டமூலம்   இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த  அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா தடுப்பூசி ஏற்றுவதில் அரசு பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்துகின்றது. சீனா,இந்தியா, அமெரிக்கா,பிரிட்டன் தயாரிப்புக்களான கொரோனா தடுப்பூசிகளை இந்த தந்திரத்தை பயன்படுத்தியே மாகாணத்துக்கு, மாவட்டத்துக்கு என பிரித்து, பிரித்து  ஏற்றி வருகின்றது.

இதில் சீனத்தயாரிப்பான   சினோபார்ம் கொரோனா  தடுப்பூசியை பல நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன . ஆனால்   இந்த தடுப்பூசியைத்தான் அரசு பெருமளவான இலங்கையர்களுக்கு ஏற்றுகின்றது. அதாவது சீனாவை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு மட்டுமே இலங்கையர்கள் பயணம் செய்ய வேண்டுமென்பதே இந்த அரசின் நோக்கமாகவுள்ளது.

சீன தடுப்பூசியை பல வெளிநாடுகள் ஏற்க மறுத்துள்ளதால் தான் இளைஞர் ,யுவதிகள் பலரும் இதனை ஏற்ற மறுக்கின்றனர். எனவே இலங்கையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும்  திட்டம் முழுமையாக வெற்றி பெறவேண்டுமானால் எந்த தடுப்பூசியை ஏறினாலும் இலங்கையர்கள் வெளிநாடு செல்லக்கூடிய வழிவகைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். எனவே இது தொடர்பில் அரசு வெளிநாடுகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில்...

2022-10-03 16:51:03
news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

காத்தான்குடி கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவரைக்...

2022-10-03 20:47:47
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37