எம்.மனோசித்ரா

பிராந்திய வர்த்தகத் துறைமுகமாக நடாத்திச் செல்வதற்கு இயலுமான வகையில் 'சுற்றுலா ஈர்ப்பு  மற்றும் பாதுகாப்பான இறங்குதுறை' எனும் தொனிப்பொருளின் கீழ் காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச - தனியார் பங்குடமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்டமாக சம்பிரதாய வரையறைகளுக்கு மட்டுப்பாடுகள் விதிக்காமல், தனியார் துறையின் முதலீடுகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் காலி துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக துறைமுகங்கள் மற்றும் கப்பட்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய, முன்மொழியப்பட்ட குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பட்துறை  அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.