தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

By Vishnu

23 Sep, 2021 | 08:28 AM
image

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 489 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலக் கட்டத்தில் 29 வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 77,125 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right