ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகளினால் இலகுவாக வீழ்த்திய டெல்லி

Published By: Vishnu

23 Sep, 2021 | 07:36 AM
image

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியானது 8 விக்கெட்டுகளினால் இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

2021 ஐ.பி.எல். தொடரில் நேற்றிரவு டுபாயில் நடைபெற்ற 33 ஆவது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலையைிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரிஷாப் பந்த் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அணி சார்பில் அதிகபடியாக அப்துல் சமட் 28 ஓட்டங்களையும், ரஷித் கான் 22 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சர்பில் ரபடா 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

135 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி, 17.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியை பதிவுசெய்தது.

ஆரம்ப வீரர்களான பிரித்வி ஷா 11 ஓட்டங்களுடனும், தவான் 34 பந்துகளில் ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஸ்ரேஸ் அய்யர் 47 (41) ஓட்டங்களுடனும், ரிஷாப் பந்த் 35 (21) ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி பட்டியலில் 14 புள்ளிகளை பெற்று, முதலிடத்தில் உள்ளது. 

இன்றிரவு டுபாயில் ஆரம்பமாகும் 34 ஆவது லீக் போட்டியில் மும்பை அணியும் கொல்கத்தா அணியும் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேஜர் லீக் ரக்பி தொடர் நாளை...

2023-11-30 17:43:19
news-image

'ஸ்ரீ லங்கா யூத் லீக் 2023'...

2023-11-30 13:51:56
news-image

தனுஸ்கவை மற்றுமொரு சட்டத்தின் கீழ் சிக்கவைப்பதற்குஅவுஸ்திரேலிய...

2023-11-29 14:37:50
news-image

எங்கள் தந்தை இருதயபரிசோதனை செய்திருந்தால் இன்றும்...

2023-11-28 12:23:12
news-image

வரலாற்றுச் சாதனை புரிந்த பம்பலப்பிட்டி இந்துவின்...

2023-11-28 09:58:58
news-image

அரசியல்வாதியாக அவதாரமெடுக்கின்றார் ஷாகிப் அல் ஹசன்

2023-11-27 14:38:26
news-image

இளையோர் உலக குத்துச் சண்டையில் களமிறங்கும்...

2023-11-25 14:16:41
news-image

ஓய்வை அறிவித்தார் பாகிஸ்தானின் சகலதுறை ஆட்டக்காரர்

2023-11-25 12:16:36
news-image

உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் “ஜேர்சிகள்”...

2023-11-25 12:04:52
news-image

ஓட்டம் எதனையும் வழங்காமல் 8 விக்கெட்டுக்களை...

2023-11-24 17:48:33
news-image

தனுஸ்க விவகாரம் - அவுஸ்திரேலிய பொலிஸார்...

2023-11-24 12:20:51
news-image

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விரர்...

2023-11-23 13:18:49