(எம். எம். சில்வெஸ்டர்)

 உலக பிரசித்திதிபெற்ற மூலிகை  மருத்துவர் எலியந்த வைட் கொரோன வைரஸ் தொற்றினால் சற்று முன்னர்  (22) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச, லசித் மாலிங்க, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு பண்டைய கால மருத்துவ முறைகள் மூலம் நோய்களையும் உபாதைகளையும் குணப்படுத்தியவர் ஆவார்.

கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு வார காலம் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டவேளையில் உயிரிழந்ததாக   தெரிவிக்கப்படுகிறது.