(எம்.மனோசித்ரா)

அமைச்சரவை அல்லது தேசிய கொவிட் செயலணியினால் மதுபானசாலைகளை திறப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Articles Tagged Under: டலஸ் அழகப்பெரும | Virakesari.lk

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (22) இணையவழியூடாக நடைபெற்ற போது மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மதுவரி திணைக்கள ஆணையாளர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஷத்தன்மையுடைய மதுபான பாவனையை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாறாக இதற்கு அமைச்சரவை அல்லது தேசிய கொவிட் செயலணியினால் இந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.