அநுராதபுர சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றும் தீர்மானமில்லை - நீதியமைச்சர் அலிசப்ரி

By T Yuwaraj

23 Sep, 2021 | 07:08 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவத்தை அரசாங்கமாகவும், நீதி அமைச்சராக வன்மையாக கண்டிப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார். 

Articles Tagged Under: அலி சப்ரி | Virakesari.lk

இந்த சம்பவத்தை அடுத்து எல்.ரி.ரி.ஈ கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்ற தீர்மானம் எடுக்கவில்லை, தொடர்ந்தும் அனுராதபுரம் சிறையில் வைக்கப்படுவார்கள்.

ஆனால் அவர்களுக்கு முழுமையான உயரிய பாதுகாப்பை கொடுக்கவும், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் கூறினார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில்  தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில்  இன்ற பாராளுமன்றில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் 27/2 இன் கீழ்  விசேட பிரேரணை ஒன்றினை முன்வைத்தார். 

இதற்கு பதில் தெரிவித்திருந்த நீதி அமைச்சர் அலி சப்ரி கூறுகையில்,

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை நாம் அரங்கமாக கண்டிக்கின்றோம், அதேபோல் இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுப்போம். 

நீதி அமைச்சராக இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இனிமேல் எப்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். அத்துடன் அரசியல், இன மற்றும் மத சாயம் பூசி இதனை கையாளாது இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அவ்வாறான எந்த பாகுபாடும் பார்க்கப்படாது.

 இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளது. உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

இப்போதும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாக விசாரணைகளை நடத்துமாறு கோரியுள்ளது.  பாதிக்கப்பட்ட தரப்பினர் பாதுகாக்கப்படும் விதமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர்.அரசாங்கம் இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. 

மேலும், இன்று அமைச்சரவையில் தீர்மானம் ஒன்றும் இது குறித்து எடுக்கப்பட்டது. அதாவது ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட குளுவின்ருன் சுயாதீன விசாரணை ஒன்றினையும் முன்னெடுத்து எமக்கு அறிக்கையிட பணிக்கப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணம் கொண்டும் இனம், மதம் பாகுபாடு பார்த்து இவை ஒருபோதும் மூடிமறைக்கப்படாது. 

அதேபோல் பொன்னம்பலம் எம்.பி சில கேள்விகளை எழுப்பியுள்ளார், அதில் முதலாவது, ஏற்கனவே குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சுயாதீனமாக முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு அவரது தலையீடுகள் எதுவும் இருக்காது. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன் சட்டமா அதிபரின் கண்காணிப்பு செயற்பாடுகளும் இதில் நிச்சயமாக இருக்கும். எனவே இது குறித்து எந்த சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

 சிறைக்கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார், எனினும் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படவில்லை, எல்.ரி.ரி.ஈ கைதிகள் தொடர்ந்தும் அனுராதபுரம் சிறையில் வைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை கொடுக்க ஏற்கனவே பணித்துள்ளோம்.சாட்சியாளர்களை பாதுகாக்கும் அமைப்பும் இதனை வலியுருதியுல்ள்ளது. 

அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் இப்போது பாதுகாப்பாக உள்ளனர். 

அவர்கள் தொடர்பான வழக்குகள் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே அவர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவார்களாக என்பதை என்னால் கூற முடியாது. ஆனால் அவர்களை அனுராதபுரம் சிறையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், பயங்கரவாத தடை சட்டம் குறித்தும் பேசப்படுகின்றது, ஆனால் இலங்கையின் கடந்த கால பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் இருந்தது, சஹரானின் தாக்குதலை அடுத்தும் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டது. 

ஆகவே இந்த நிலையில் நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும்.

ஆனால் இது பொதுமக்களை பாதிக்க கூடாது, ஆகவே தான் தேசிய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு மக்களின் உரிமைகள் மற்றும் சகல மக்களையும் மதிக்கும் வகையில் பயங்கரவாத தடை சட்டத்தில் மாற்றங்களை செய்ய ஜனாதிபதியும், அமைச்சர்களான நாமும் சர்வதேச தரப்பிடமும் கூடியுள்ளோம். 

1979ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டம் கொண்டுவரப்பட்ட வேளையில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை குழு எதுவும் நியமிக்கப்படவில்லை.

ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷதற்போது ஆலோசனை குழுவை நியமித்துள்ளார், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அசோக டி சில்வா, முன்னாள் சட்டமா அதிபர் சுகத கம்லத் மற்றும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹெய்யந்தொடுவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஆகவே எவரேனும் ஒருவர் தவறாக பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால், அல்லது கைது செய்யப்படும் எவரும் அவ்வாறு கைது செய்யாது இருந்தால் குறித்த குழுவில் தெரிவிக்க முடியும். 

சகல சிறை கைதிகளையும் பாதுகாக்கும், மதிக்கும் நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுக்கும். எனினும் குறித்த சிறை கைதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right