புத்தளம்  வண்ணாத்திவில்லு சேரக்குளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

கரைத்தீவு சேரக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 97 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பகுதியிலுள்ள வீடு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாலை திடீரென தீப்பிடித்து எறிவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

எனினும் குறித்த வீட்டில் வசித்து வந்த வயோதிபர் ஒருவர் இந்த தீ விபத்தினால் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த வயோதிபரின் சடலம் நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் கூறினர்.

இந்த தீ விபத்துச் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.