(எம்.மனோசித்ரா)
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.
எனவே இது வீணாக கலவரமடையக் கூடிய காரணியல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள திறைசேரி தகவல்களின் அடிப்படையில் கருத்து ரீதியிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவே தெரியவந்துள்ளது. இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடலில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
நான் மின்சக்தி அமைச்சராக செயற்பட்ட போது எனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிவித்திருக்கின்றேன்.
வெளிநாட்டு முதலீடுகள் தேவையற்றவை என்று கூற முடியாது. ஆனால் மின்சாரசபையின் செயற்பாடுகளை பாதிக்காத வகையில் அவை காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
எனவே இது தொடர்பில் வீண் கலவரமடையத் தேவையில்லை. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார். மின்சக்தி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு என்பவையே இது தொடர்பில் நிலைப்பாட்டினை அறிவிக்கக்கூடிய நிறுவனங்கள் ஆகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM