யானை விவகாரம் : இரு நீதிவான்களின் உத்தரவுகளுக்கு எதிராக எழுத்தாணை மனு

Published By: Digital Desk 4

22 Sep, 2021 | 03:53 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மோசடியாக ஆவணங்களை தயார் செய்து, யானைகளை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான விவகாரத்தில் சி.ஐ.டி.யின் பொறுப்பின் கீழ் பின்னவல மற்றும் வேறு யானை பராமரிப்பு நிலையங்களில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ( கைப்பற்றும் போது உரிமை கொண்டாடியோர்) கையளிக்க இரு நீதிவான்கள் பிறப்பித்த உத்தரவுகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி எழுத்தாணை மனுவொன்று ( ரிட் மனு) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரன், மாத்தளை நீதிவான் சி.விக்ரமநாயக்க ஆகியோரின் உத்தரவுகளை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரியே மேன் முறையீட்டு நீதிமன்றில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் விலங்குகள் மற்றும் தாவரங்கள் தொடர்பிலான கட்டளை சட்டத்தின் 6 ஆம் அத்தியாயத்தின் 2 ஆம் பிரிவின்  பிரகாரம், 2241/21 ஆம் இலக்க ஆகஸ்ட் 19 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமனி அறிவித்தலுக்கும் இடைக்கால தடை விதிக்க குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் மற்றும் வன ஜீவிகள் நலன்கள் குறித்த அமைப்புக்கள் சிலவற்றினால் இந்த எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

 எனவே 14 யானைகளை அவற்றின் உரிமையாளர்களிடம் ( கைப்பற்றும் போது உரிமை கொண்டாடியோர்) கையளிக்க இரு நீதிவான்கள் பிறப்பித்த உத்தரவுகளை வலுவிழக்கச் செய்யுமாறும் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

 இதனிடையே, கொழும்பு மேலதிக நீதிவான் எஸ். பிரபாகரனின் உத்தரவுக்கு அமைய விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ள 14 யனைகளில், ' சுஜீவா' எனும் 206 ஆம் இலக்க யானை,  குட்டியொன்றினை ஈன்றுள்ள நிலையில், அக்குட்டியுடன் சேர்த்து தாய் யானையையும் அதன் உரிமையாளரிடம் கையளிக்க வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவிடம் இக்கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த விவகார வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு என்ற ரீதியில், அவர் முன்னிலையில் அந்த கோரிக்கையை முன் வைக்குமாறு அறிவித்து நீதிவான் ஆலோசனை வழங்கியுள்ளார். இந் நிலையில் அது குறித்த கோரிக்கைகளை ஆராய எதிர்வரும் 24 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38