புருண்டியின் மிகப்பெரிய நகரமான புஜும்புராவில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 50 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

நகரின் மையப்பகுதியில் பேருந்து நிறுத்தும் இடத்தில் இரண்டு கையெறி குண்டுகள் வெடித்தன, மூன்றாவது குண்டுவெடிப்பு 'Bwiza' சுற்றுப்புறத்தில் உள்ள 'Jabe' சந்தையைத் தாக்கியதாக சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

அடையாளம் தெரியாத நபர்கள் வெடி குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக புருண்டி உள்துறை அமைச்சகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

சுமார் 11.5 மில்லியன் மக்கள் வாழும் புருண்டி பல தசாப்தங்களாக போர் மற்றும் இன மற்றும் அரசியல் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளது.