இலங்கையில் இருந்து 14 பேர் கொண்ட மூத்த பௌத்த துறவிகள் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டனர். இவர்கள் பாகிஸ்தானில் பல்வேறு பௌத்த பாரம்பரிய இடங்களுக்கும் சென்றிருந்தனர். முஸ்லிம் இன மக்களை  பெரும்பான்மை நாடாக கொண்ட பாகிஸ்தான் பௌத்த  பாரம்பரியத்தை திடீரென வளர்ப்பதும் அதனை சார்ந்த இராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பதானது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகவுள்ளது.

பௌத்த மதத்தை தனது இராஜதந்திர ஆயுதமாக இங்கு பயன்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுவதுடன் மறுப்புறம் கடந்த கால கசப்பான சம்பங்பளை மறைப்பதற்கு இவ்வாறான விடயங்கள் கையாளப்படுகின்றதா என்பதும் முக்கியமாகின்றது.  எவ்வாறாயினும்  இலங்கை  மற்றும் இந்தியா போன்ற பௌத்த  தோற்றத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய இணைப்புகளைப் பேணுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் அதிகம் தூண்டப்படுகிறது.

மேலும்,  தலிபான் மற்றும் தெஹ்ரீக்-இ-போன்ற பயங்கரவாத குழுக்களிடமிருந்து  பௌத்த தளங்களை பாதுகாப்பதில் பாகிஸ்தான் மற்றும்  அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக தவறியுள்ளன.  தீவிர இஸ்லாத்தை  ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளே இடம்பெற்றுள்ளன.  எனவே தீவிர இஸ்லாமியக் குழுக்களை ஆதரித்து வளர்க்கும் பாகிஸ்தான், இலங்கையுடனான உறவுகளை பௌத்த மதத்தை கருவியாக பயன்படுத்துவதானது முரண்பாடானதாகும்.

இந்நிலையில் லாகூர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு இலங்கை துறவிகள் பாகிஸ்தானுக்கான பயணத்தைத் ஆரம்பித்தனர். அதில் காந்தார நாகரிகத்தின் சில எச்சங்கள் மற்றும் அரிய புத்தமத நினைவுச்சின்னங்கள் உள்ளன.  இந்த விஜயமானது உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.  மத சுற்றுலாவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. சந்தேகத்திற்கு இடமின்றி, பாகிஸ்தான் அல்லது மாறாக இந்திய துணை கண்டத்தின் அந்த பகுதிகளில் புத்தமதம் பரவிய பல இடங்கள், கலைப்பொருட்கள் மற்றும் புத்தருடன் தொடர்புடைய இடங்கள் உள்ளன.

புத்த மதத்தை மேம்படுத்துவதற்கான சமீபத்திய பாகிஸ்தான் முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அதன் பௌத்த பாரம்பரியத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கும் உந்துதல் அளிக்கப்படுகிறது. உலகளாவிய கட்டுப்பாட்டை கையகப்படுத்தும் பணியில் தற்போது இருக்கும் சீனாவின் தூண்டுதலின் பேரில் இவ்வாறு செய்யப்படலாம். உதாரணமாக 2018 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இலங்கைக்கு பௌத்த நினைவுச் சின்னங்களை அனுப்பியது. 

இவை அனைத்தும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் பாகிஸ்தான் அரசு முஸ்லிம் பெரும்பான்மை  கொண்டிருக்கும் நிலையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அஹ்மதியாக்கள் போன்ற பிற முஸ்லிம்கள் மீது காணப்பட கூடிய நெருக்கடிகள் குறித்து உலகளவில் மனித உரிமைகள் குழுக்களால் பரவலாக விமர்சிக்கப்படும் விடயமாகும்.

2017 ஆம் ஆண்டில் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் கட்டுமானத் தொழிலாளர்களால் புத்தர் சிலை உடைக்கப்பட்டது. 1,700 ஆண்டுகள் பழமையான இந்த சிலை மர்தான் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணையில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போன்ற சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மர்தான் மாவட்டத்தின் தக்த் பாஹி பகுதியில் ஒரு வீட்டின் அஸ்திவாரம் தோண்டிய போது பழைய புத்தர் சிலையை கண்டெடுத்தனர்.

இஸ்லாமிய மற்றது என்ற வேண்டுகோளின் பேரில் அவர்கள் அதை அழித்தனர்.  இவ்வாறு பௌத்த தடங்கள் அழிக்கப்பட்டது. மறுப்புறம்  இவ்வாறான செயற்பாடுகளில் இடுப்படும் பல பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் அரசு ஆதரிக்கிறது.  பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பல புத்த சிற்பங்கள் மற்றும் ஸ்தூபங்கள் உள்ளன. இவை ஆபத்தை எதிர்க்கொண்டுள்ளன.

பாமியான் புத்தர் சிலையை தலிபான்கள் அழித்தனர். அழிவுகளை எதிர்க்கொண்ட பௌத்த தளங்களையும் புத்தர் சிலைகளையும் பாதுகாக்க  பாகிஸ்தான் அரசு எதுவும் செய்யவில்லை. 1990 களின் இறுதியில் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திய தலிபான் இயக்கம் இஸ்லாமியத் தண்டனைகள் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகள் பற்றிய ஒரு பிற்போக்கு யோசனை ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இதில் தொலைக்காட்சி, பொது மரணதண்டனை மற்றும் 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிறுமிகளுக்குப் பள்ளிகளில் அனுமதி மறுப்பு ஆகியவை அடங்கும்.

பாமியன் புத்தர்களின் அழிவு இந்த தீவிரவாத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் கலாச்சார  மரபுரிமைகளின் ஆர்வலர்கள் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும்  2001 பெப்ரவரி 27 ஆம் திகதியன்று  தலிபான்கள் சிலைகளை அழிக்க  போவதாக அறிவித்தனர். இதன் போதும் கூட அவற்றை பாதுகாக்க பாக்கிஸ்தான் செயற்பட வில்லை.  இந்நிலையில் இலங்கையுடன்  மத சுற்றுலாவை ஊக்குவிப்பதானது கடந்த கால அழிவை மறைப்பதற்கான முயற்சியென்றாலும் உண்மைகள் எப்போதும் வெளிப்படும்.