அம்பாந்தோட்டை பகுதியில் காணமல்  போனதாக கூறப்பட்ட இளைஞரை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்டது.

இதனால் அம்பாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த இளைஞரை கைதுசெய்தமைக்கான பதிவுகள் எவையும் பொலிஸாரிடம் இருக்கவில்லை.

இந்நிலையில் குறித்த இளைஞர் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.