உலகம் தவறான  திசையில் பயணிக்கிறது : விழித்துக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறார் ஐ.நா. செயலாளர் நாயகம்

By Gayathri

23 Sep, 2021 | 10:22 AM
image

(நா.தனுஜா)

உலகம் உடனடியாக விழித்துக்கொள்ளவேண்டும். நாம் இப்போது பாரிய பள்ளத்தின் விளிம்பில் இருப்பதுடன் தவறான திசையில் பயணித்துக்கொண்டிருக்கின்றோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

அதுமாத்திரமன்றி உலகம் கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலைக் கையாண்ட விதத்தைப் பொறுத்தவரையில், நாம் அறிவியல் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கின்றோம். ஆனால் அடிப்படை நெறிமுறைகளில் தோல்வியடைந்திருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

 

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாடு நேற்று அமெரிக்கத் தலைநகர் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தில் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தலைமையில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.

 

'கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை மேம்படுத்தல், நிலைபேறானதன்மையை மீளக்கட்டியெழுப்பல், பூமியின் தேவைகளைக் கவனத்திற்கொள்ளல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மறுமலர்ச்சி' என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இக்கூட்டத்தொடரில் உலகத்தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே ஐ.நாவின் செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

செல்வந்த நாடுகளில் பெருமளவானோருக்கு கொவிட் - 19 தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஆபிரிக்கர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னமும் முதலாம் கட்டத் தடுப்பூசிக்காகக் காத்திருக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய அவர், பல்வேறு சவால்கள் காணப்படுகின்றபோதிலும் கடந்த இருவருடகாலத்தில் அடைந்துகொண்ட வெற்றியைக் கொண்டாடுவதற்கு சில நிமிடங்களேனும் ஒதுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

அதேவேளை பொதுச்சபைக்கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், 'கொவிட் - 19 வைரஸ் தொற்றுப்பரவலைத் தோற்கடித்து, உலகின் முன்னால் காணப்படும் முக்கிய சவாலை வெற்றிகொள்வதற்கு அனைவரும் அணிதிரளவேண்டும்' என்று உலகநாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

'மிகுந்த வேதனைக்குரிய இக்காலகட்டத்தில், உலகம் முழுவதிலும் சுமார் 4.5 மில்லியனுக்கும் அதிகமானோரை இழந்திருக்கின்றோம். இருப்பினும் எமது இந்தத் துயரம், அனைவருக்கும் பொதுவான மனிதாபிமானத்தையும் ஒருமித்துச் செயலாற்றவேண்டியதன் அவசியத்தையும் நினைவுறுத்துவதாக அமையும். 

உலகம் பிளவுபட்டிருக்கும் சூழ்நிலையில், நாங்கள் புதிதாக ஓர் பனிப்போரைக் கோரவில்லை. மாறாக அமைதிக்கு வழிவகுக்கும் தீர்மானங்களை விரும்புகின்ற எந்தவொரு நாட்டுடனும் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது. ஏனெனில் கடந்தகாலத் தோல்விகளின் விளைவுகளால் நாமனைவரும் ஏற்கனவே துன்பத்தை அனுபவித்திருக்கின்றோம்' என்றும் ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்தார்.

 

மேலும் 'பயங்கரவாதத்தின் கசப்பான விளைவுகளை நாம் நன்கு அறிவோம். கடந்த மாதம் காபூல் விமானநிலையத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத்தாக்குதலில் நாம் 13 அமெரிக்கப்படைவீரர்களை இழந்ததுடன் மேலும் பல ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். 

எமக்கெதிரான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எவரொருவரும் அமெரிக்காவின் எதிரியாகவே கருதப்படுவர்' என்றும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

அதுமாத்திரமன்றி போர்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, சவால்களுக்கு முகங்கொடுத்து, ஒற்றுமையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவது குறித்து அமெரிக்கா அவதானம் செலுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: ஈரான் சிறுமியை...

2022-10-05 17:12:16
news-image

இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசிற்கு மூவர்...

2022-10-05 16:24:29
news-image

இந்தியா - எத்தியோப்பியா ஆகிய நாடுகள்...

2022-10-05 16:36:57
news-image

இந்தியாவில் உத்தரகாண்ட் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து...

2022-10-05 13:36:33
news-image

சூதாட்டத்தில் 269 ஆயிரம் டொலர்களை வென்ற...

2022-10-05 12:45:36
news-image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'பிரசந்தா' இலகுரக போர்...

2022-10-05 12:44:52
news-image

பூனைக்காக நபரொருவரைக் கொலை செய்த யுவதி

2022-10-05 12:27:48
news-image

டுபாயில் கோவில் திறக்கப்பட்டது

2022-10-05 11:44:35
news-image

ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல்...

2022-10-04 09:13:35
news-image

புட்டினுக்கு பாப்பரசர் விடுத்துள்ள வேண்டுகோள்

2022-10-03 14:40:30
news-image

தமிழகம்- கேரளாவில் இந்து தலைவர்களை கொல்ல...

2022-10-02 12:50:44
news-image

ரஸ்யாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்றது...

2022-10-02 12:19:52