சட்ட விரோதமான முறையில் சாராயம் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை மடுல்சீமைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த 36 போத்தல் சாராயத்தையும், 750 மில்லிலீட்டர் கொண்ட கசிப்பினையும் மீட்டனர்.

மடுல்சீமைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, விரைந்த பொலிஸார், மேற்படி ரோபேரி பெருந்தோட்டப்பிரிவைச் சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களை, பதுளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய, பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.