மர்க்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், பதுளை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளை – வெல்லாவாயா பிரதான வீதியின் எல்ல என்ற பகுதியில் நேற்று இரவு ( 21-09-2021) இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து மரக்கறி வகைகளுடன் சென்ற டிப்பர் லொறி, சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ்விபத்தில் டிப்பர் லொறியின் உதவியாளர் பாய்ந்து தப்பியுள்ளார். 

தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுவரும் சாரதியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ் விபத்து குறித்து எல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.