ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு பொதுக்கூட்டம்  அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் சுகாதார அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனேரோவுடன்   மார்சிலோ ஐநா கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். 

தொற்று பாதித்த மார்சிலோ நலமாக இருப்பதாகவும், அவருடன் இருந்த மற்ற எவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பிரேசில் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால்  மார்சிலோ நியூயோக்கிலேயே 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.