பனிப்போரைக் கோரவில்லை : அமைதியை விரும்பும் நாட்டுடன் இணைந்து செயற்படத் தயார் - பைடன் அறிவிப்பு

Published By: Gayathri

22 Sep, 2021 | 11:29 AM
image

உலகம் பிளவுபட்டிருக்கும் இந்த நிலையில், நாங்கள் புதிதாக ஓர் பனிப்போரைக் கோரவில்லை.  அமைதிக்கு வழிவகுக்கும் தீர்மானங்களை விரும்புகின்ற எந்தவொரு நாட்டுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76 ஆவது கூட்டம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த பொதுச்சபையில் அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் பங்கேற்று உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எவரொருவரும் அமெரிக்காவின் எதிரியாகவே கருதப்படுவர்.

எந்த நாட்டுடனும் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கின்றது.

நமது பாதுகாப்பு, வளர்ச்சி, சுதந்திரம் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவையாகும். இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நாம் இணைந்து செயல்படவேண்டும்.

நாம் இன்று பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகால பிரச்சினையை நாம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம்.

இந்த போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நாம் அங்கு வெளியுறவுக்கொள்கை என்ற கதவுகளை திறந்துள்ளோம். பல சவால்களை நாங்கள் சந்தித்தபோதும் அமெரிக்கா சிறப்பான முறையில் செயற்பட்டது.

ஆயுதங்கள் கொரோனா வைரஸை வீழ்த்தாது. ஒருங்கிணைந்த அறிவியல் மற்றும் அரசியல் சக்திகளால் கொரோனாவை வீழ்த்தலாம். நாம் இப்போதே செயல்பட வேண்டும்.

அமெரிக்கா இராணுவ சக்தி என்பது எங்கள் முதல் ஆயுதமல்ல... இறுதி ஆயுதம் ஆகும். நமது தோல்விகளால் நாம் அனைவரும் விளைவுகளை சந்தித்துள்ளோம்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை கோபுலு தாக்குதல் நடந்தபோது அப்போதிருந்த அமெரிக்கா தற்போது இல்லை. இன்று நாம் சிறந்த ஆயுதங்கள் மற்றும் அதிக திறனுடன் உள்ளோம்.

பயங்கரவாதத்தின் கசப்பான விளைவுகளை நாம் நன்கறிவோம். கடந்த மாதம் காபூல் விமானநிலைத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் நாம் 13 அமெரிக்க வீரர்களை இழந்ததோடு, மேலும் பல ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர்.

எமக்கெதிரான பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற எவரொருவரும் அமெரிக்காவின் எதிரியாகவே கருதப்படுவர். உலகம் பிளவுபட்டிருக்கும் நிலையில், நாங்கள் புதிதாக ஓர் பனிப்போரை கோரவில்லை.

அமைதிக்கு வழிவகுக்கும் தீர்மானங்களை விரும்புகின்ற எந்தவொரு நாட்டுடனும் இணைந்து செயற்பட அமெரிக்கா தயாராக இருக்கின்றது.

ஏனெனில் கடந்தகாலத் தோல்விகளின் விளைவுகளால் நாமனைவரும் துன்பத்தை அனுபவித்திருக்கின்றோம்.

மிகுந்த வேதனைக்குரிய இக்காலகட்டத்தில், உலகம் முழுவதிலும் சுமார் 4.5 மில்லியனுக்கும் அதிகமானோரை இழந்திருக்கின்றோம்.

இருப்பினும் எமது இந்த துயரம், அனைவருக்கும் பொதுவான மனிதாபிமானத்தையும் ஒருமித்துச் செயலாற்றவேண்டியதன் அவசியத்தையும் நினைவுறுத்துவதாக அமையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐ.நா. பொதுச் சபை உரையில் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16
news-image

புட்டினுடன் டிரம்ப் தொலைபேசி உரையாடல் -...

2025-02-14 15:11:08
news-image

செர்னோபில் அணுஉலையை ரஸ்ய ஆளில்லா விமானம்...

2025-02-14 14:31:15
news-image

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னரும் ஜேர்மனி நாடு...

2025-02-14 13:13:29
news-image

உக்ரைன் யுத்தம் குறித்து இன்று முக்கிய...

2025-02-14 12:22:29
news-image

ட்ரம்பை சந்தித்த இந்திய பிரதமர் .....

2025-02-14 11:07:20
news-image

ஜேர்மனியில் பொதுமக்கள் மீது காரால் மோதிய...

2025-02-14 07:41:47
news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09