(எம்.மனோசித்ரா)

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதற்கு முன்னர் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி, அந்த கடிதத்தின் ஊடாக இலங்கை மருத்துவ சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொவிட் தொற்று பரவல் அதிகரிப்பதோடு , வீட்டு வன்முறைகள் மற்றும் வீதி விபத்துக்கள் அதிகரித்தல் என்பனவும் இதன் மூலம் அதிகரிக்கும்.

இதன் காரணமாக மதுபான விற்பனையை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இணையவழியூடாகக் கூட மதுபானத்தை விற்பனை செய்யாமலிருப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் இலங்கை மருத்துவ சங்கம் அதன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.