(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிவான் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் குடி போதையில் பாதுகாப்பு கடமைகளில் இருந்ததாக கூறி கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தின் பொலிசார் இருவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் சார்ஜன் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கொரோனா தொற்று பரவலிடையே, பொலிஸாருக்கு தமது வதிவிடங்களில் இருந்து அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமைகளை முன்னெடுக்க சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சலுகையின் கீழ் குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும், கட்டுகஸ்தோட்டை - அலதெணிய பகுதியில் உள்ள நீதிவான் ஒருவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கடமையில் ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (20) இரவு, கட்டுகஸ்தோட்டை பொலிஸார், இரவு நேர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சமயம், குறித்த இருவரும் குடி போதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே அவ்விருவரும் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM