லோகன் பரமசாமி

அமெரிக்க நூதனசாலைகளால் கடந்த ஒன்பது மாதங்களில்  பழமை வாய்ந்த இந்து மத கற்சிலைகள் பல வொஷிங்டனில்உள்ள நேபாள தூதுவராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.  

பல நூற்றாண்டுகள்  பழைமை வாய்ந்த இந்தக்கற்சிலைகள் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் உள்ள இந்து கோவில்களில் இருந்துகளவாடப்பட்டு அமெரிக்க நூதனசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. யாரால் களவாடப்பட்டன  என்பது குறித்து அதிகமான விபரங்கள் தெரியாத போதிலும்கொலராடோ, டென்வர், சிக்காகோ என்று அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நூதனசாலைகளில்அச்சிலைகள் பேணிப்பாதுகாக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது அவை யாவும் ஒவ்வொன்றாக மீண்டும் நேபாளத்தில் உள்ள கோவில்களுக்குஅனுப்பபட்டு வருகின்றன.  இதன்மூலம் இந்துமதத்தினைஅடிப்படையாகக் கொண்ட நாடான நேபாளத்தினதும் அதன் மக்களினதும் நன்மதிப்பையும் செல்வாக்கையும்அமெரிக்கா அதிகளவில் பெற்று வருகின்றது.  

குறிப்பாகஅமெரிக்க நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகள் அதிகளவில் செல்வாக்குப்பெற்று வருவதை காணக்கூடியதாகவுள்ளது.

நேபாளத்தின் பூகோள அமைவும் அதன் மீது அதிகரித்து வரும் சீன செல்வாக்கும்அமெரிக்காவின் இவ்விதமான ஆர்வமான நகர்வுக்கு முக்கிய காரணமாகவுள்ளது என்று நேபாள ஆய்வாளர்கள்விபரித்து வருகின்றனர். 

நேபாளத்தின் வெளியுறவுக் கொள்கை அதன் பூகோள அமைவினை மையப்படுத்திபெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.