மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி : உலகளாவிய தர்க்கங்களும் நியாயங்களும்

By Digital Desk 2

21 Sep, 2021 | 05:45 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை 

கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் பிரதான மார்க்கமாக உலக நாடுகள்தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தை நம்பியிருக்கின்றன. இந்தத் திட்டம் விஞ்ஞானபூர்வமானதாகஇருக்க வேண்டுமென விஞ்ஞானிகள் வலியுறுத்துகிறார்கள். 

இதற்காக, முதலில் வயது முதிர்ந்தவர்களுக்கும்,அடுத்ததாக மருத்துவ ரீதியில் கூடுதலாக பாதிக்கப்படக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி வழங்குதல்பொருத்தமென விஞ்ஞானிகள் பரிந்துரைக்கிறார்கள்.

 பெருந்தொற்றுப் பரவலால் பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள்வீடுகளில் முடங்கிக் கிடக்கிறார்கள். கல்வி பாதிக்கப்படுகிறது. சம வயதை ஒத்தவர்களுடன்தோளோடு தோள் சேர்த்து விளையாடி, உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, பருவத்திற்கு ஏற்ப பட்டாம்பூச்சிகளாக வாழும் வாழ்க்கையை அவர்கள் இழந்திருக்கிறார்கள். 

உளவியல் ரீதியான பாதிப்புக்களைஎதிர்கொள்கிறார்கள். எனவே, அவர்களின் இயல்ப வாழ்க்கையை மீண்டும் பெற்றுக் கொடுத்து,தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. 

இதற்குப் பரிகாரமாக, பல நாடுகள் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளைஏற்றி வருகின்றன. பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில்மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படுகிறது. 

அமெரிக்காவில் 12 வயதைத் தாண்டிய சகலருக்கும்தடுப்பூசி ஏற்றுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சீனாவில் 12 முதல் 17என்ற வயதெல்லைக்குஉட்பட்ட சகலருக்கும் ஒக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி ஏற்றிவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right