அரிசிக்கும், சீனிக்கும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை : நிதி அமைச்சர் பஷில் நிலைமைகளை விளங்கிக்கொள்ள வேண்டும் - சார்ல்ஸ் எம்.பி

By Gayathri

21 Sep, 2021 | 05:46 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறினார்கள். ஆனால் அரிசிக்கும், சீனிக்கும் மக்கள் ச.தொ.ச முன்பாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என்பது நிதி அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப்பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் பொருளாதாரம் பின்தங்கிய நிலைக்கு சென்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் விலை நிர்ணயம் இல்லாது சாதாரண மக்களுக்கு பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. 

அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலமாக விலையை நிர்ணயித்தாலும் கூட சாதாரண மக்களால் தாக்கு பிடிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. 

எனவே கொவிட் தொற்றுக்கு மேலதிகமான நாட்டினுடைய நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் தவறு இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன். 

இந்த அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பல அதிகாரிகள், அமைச்சினுடைய செயலாளர்கள், பணிப்பாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் கூட பணியாற்ற முடியாது தமது இராஜினாமாக்களை செய்துள்ளனர்.

நேர்மையான அதிகாரிகளை அரசாங்கம் தமது அரசியல் சுயநலன்களுக்காக பயன்படுத்த முயற்சித்த வேளையில் அதற்கு இடம் கொடுக்காத அவர்களை பதவியில் இருந்து மாற்றும் நிலை உருவாகியுள்ளது. 

நிதி அமைச்சு என்பது மத்திய வங்கியின் ஆளுநருடன் நேரடியாக தொடர்புப்பட்டது.  ஒரு புறம் கொரோனா வைரஸ் தாக்கத்தை செலுத்துகின்றது.

நாட்டின் பொருளாதார கொள்கைகளில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதனால் மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.

பஷில் ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்பாக ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறியது என்னவென்றால், பஷில் ராஜபக்ஷ வந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என கூறினார்கள். 

ஆனால் அரிசிக்கும், சீனிக்கும் மக்கள் ச.தொ.ச முன்பாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனை நிதி அமைச்சர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டில் சாதாரண மக்கள் தமக்கான அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள சிரமப்படுகின்றனர். 

விலையேற்றம் காரணமாக சாதாரண குடும்பங்கள் வாழ முடியாத நிலையொன்று காணப்படுகின்றது. விவசாயம் செய்ய பசளைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. 

இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர். எனவே நிதி அமைச்சர் இந்த விடயங்களை கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சனத் நிஷாந்தவுக்கு எதிராக குற்ற பகிர்வு...

2022-09-29 15:56:10
news-image

நாடு வங்குரோத்து நிலையை அடைந்து விட்டதாக...

2022-09-29 15:04:27
news-image

மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை...

2022-09-29 14:07:25
news-image

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து...

2022-09-29 13:06:34
news-image

பாதுகாப்பு பதில் அமைச்சருக்கும் உயர் அதிகாரிகளுக்கும்...

2022-09-29 13:44:47
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த இளைஞன்...

2022-09-29 13:44:06
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-29 13:41:48
news-image

திலீபனின் நினைவேந்தலில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கக்கூடாது -...

2022-09-29 13:40:08
news-image

தேசிய சபையில் கலந்துகொள்ளப் போவதில்லை -...

2022-09-29 13:39:12
news-image

இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப பல வருடங்களோ,...

2022-09-29 13:38:44
news-image

வெளிநாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 17 கொக்கெய்ன்...

2022-09-29 13:38:08
news-image

அதி உயர் பாதுகாப்பு வலயம் குறித்த...

2022-09-29 11:56:47