உலக சந்தையில் விலை அதிகரிப்பிற்கமைய  நாட்டிலும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் - லசந்த அழகியவண்ண

By T Yuwaraj

21 Sep, 2021 | 05:35 PM
image

(எம்.மனோசித்ரா)

பால்மா, சீனி, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. எனினும் உலக சந்தையில் விலை அதிகரிப்பிற்கமைய உள்நாட்டிலும் விலை அதிகரிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும். 

Articles Tagged Under: ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண | Virakesari.lk

குறிப்பாக அரிசி, மா, பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து என்பவை தொடர்பில் இவ்வாரத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

அத்தோடு நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்ட எந்தவொரு அதிகாரிகளுக்கும் தாம் இவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை. எனவே அதிகாரிகள் ஊடகங்களில் மாத்திரமல்ல. எங்கு சென்று வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் அதற்கு நாம் அஞ்சப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அந்த பதவிக்கு பொறுத்தமான அதிகாரிகள் வெகுவிரைவில் நியமிக்கப்படுவார்கள்.

ஆனால் அதிகாரிகளுக்கு நாம் எந்த வகையிலும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. எனவே எமது அமைச்சின் அதிகாரிகள் ஊடகங்களில் மாத்திரமல்ல. எங்கு சென்று வௌ;வேறு கருத்துக்களை வெளியிட்டாலும் அதற்கு நாம் அஞ்சப் போவதில்லை.

பால்மா மற்றும் சீமந்து இறக்குமதி நிறுவனங்களுடன் அண்மையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஏதேனுமொரு வகையில் இவற்றின் விலை அதிகரிக்கப்பட்டால் மூன்று மாதங்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி அவற்றை சந்தைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று இதன் போது குறிப்பிடப்பட்டது. அதே போன்று மூன்று மாதங்கள் செல்லும் போது விலை அதிகரிப்பையும் கோர வேண்டாம் என்றும் உறுதியாகக் கூறப்பட்டது.

நாளாந்த உற்பத்தி தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையிடம் தெரியப்படுத்தப்பட வேண்டும். மாறாக நாம் விலை அதிகரிப்பிற்கு அனுமதியளித்த பின்னர் ஏதேனுமொரு காரணத்தைக் கூறி இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கக் கூடாது என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

அதே போன்று இந்த நிறுவனங்களின் பிரதான நிறுவனங்களிடம் 6 மாத கடன் தவணை ரீதியில் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளோம். இந்த காரணிகளில் நுகர்வோருக்கு என்ன நஷ்டம் ?  வியாபாரிகளுக்கு என்ன இலாபம் ? இதுவே ஒப்பந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நிறுவனங்களுடனான சந்திப்பின் போது குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் எமது சட்டத்தில் உள்ளன. சட்டத்திற்கும் அதிகாரங்கள் காணப்படுகின்ற விடயங்கள் மீண்டும் ஒப்பந்தத்திற்குள் உள்ளடக்க வேண்டிய தேவை கிடையாது. இதில் என்ன சிக்கல் காணப்படுகிறது என்பதை அதிகாரிகள் வெளியில் கூறவேண்டும்.

பால்மா, சீனி, கோதுமைமா மற்றும் சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுமா என்று உறுதியாகக் கூற முடியாது. எனினும் உலக சந்தையில் விலை அதிகரிப்பிற்கமைய உள்நாட்டிலும் விலை அதிகரிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும். குறிப்பாக அரிசி, மா, பால்மா, சமையல் எரிவாயு, சீமெந்து என்பவை தொடர்பில் இவ்வாரத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right