நம்நாட்டு  சிங்கள மொழி பாடலான “மெனிகே மஹே ஹிதே”  (Manike Mage Hithe) என்ற பாடல் அமெரிக்க வீதிகளிலும் ஒளிக்கின்றது என்றே சொல்லவேண்டும்.

அந்தவகையில்  பிரபல வயலின் கலைஞரான 12 வயது கரோலினா ப்ரோட்சென்கோ ‘மெனிகே மஹே ஹிதே’ பாடலை அமெரிக்காவில்  வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ப்ரோட்சென்கோ தனது யூடியூப் சேனலில் அமெரிக்காவில் வீதி ஒன்றில் மெனிகே மஹே ஹிதே என்ற பாடலுக்கு வயலின் வாசித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில்  இது  யொஹானி மற்றும் சதீஷனின் மெனிகே மஹே ஹிதே வயலின்   பாடல் என பதிவு செய்து  வெளியிட்டுள்ளார்.

யொஹானி மற்றும் சதீஷனின் மெனிகே மஹே ஹிதே  தற்போது உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ளது.

இந்த வாரம் யூடியூப் உலக தரவரிசையில் இலங்கை பாடல் 7 ஆவது இடத்தில் உள்ளது. இந்த பாடல் கடந்த வாரம் 6 வது இடத்தில் இருந்தது.

யூடியூபில் இந்த பாடல் வெளியாகி 4 மாதங்களில் 116 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்த பாடலைல் தொடர்பான காணொளி ஒன்றை பொலிவூட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த பிறகு இந்த பாடல் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தது.

இது குறித்து அமிதாப் பச்சன்,  பேத்தி நவ்யா நவேலி நந்தா தனது  திரைப்படமான காலியாவில் (Kaalia) நடன காணொளியின்  ‘ஜஹான் தெறி யே நாசர் ஹை’ அசல் பாடலை ‘மணிகே மகே ஹிதே’ என்ற பாடலாக மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  நடிகர் டைகர் ஷெராஃப், மாதுரி தீட்சித், பரிணீதி சோப்ரா, இசைக்கலைஞர் சோனு நிகம் முதல் சமூக வலைத்தள பிரபலங்கள் வரை இந்த பாடலின் ரசிகர்களாகியுள்ளார்கள்.

அவர்களில் சிலர் தங்கள்  காணொளிகளில் பாடலை பின்னணி இசையாகக் கொண்டுள்ளனர், சிலர் அதற்கு நடனமாடியுள்ளனர், ஏனையவர்கள்  டியூன் செய்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு மொழிகளில் பாடல் பதிவு செய்யப்பட்டு நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.