தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமல் மீதே அதிக நம்பிக்கை  -  புதிய ஜனநாயக முன்னணி

Published By: Gayathri

21 Sep, 2021 | 05:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டும். 

தமிழ் அரசியல் கைதிகள்  தமிழ் தலைமைகள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் நடராஜா ரவிகுமார் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பினர் அரசியல் கைதிகள் விவகாரத்தை தங்களின் குறுகிய அரசியல் தேவைக்கு பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கனேஷன் உள்ளிட்ட தரப்பினரது செயற்பாடுகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் தடைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள பொது நூலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்,

அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள  தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே அச்சுறுத்தியமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இவ்விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவிற்கு எதிரான முறையான விசாரணைகளை முன்னெடுக்க ஜனாதிபதியும், பிரதமரும்  உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் தந்தை தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டர். இவ்வழியை இவரும் தொடர விரும்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. 

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் சிறந்த மாற்றம் ஏற்பட வேண்டும். சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கான சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினோம்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். 

இதுவரையில் 21 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு அரசியல் கைதிகளைக்கூட விடுவிக்க திறனில்லாதவர்கள் இன்று அரசியல் கைதிகள் நலன் தொடர்பில் அக்கறை கொண்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் தங்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைமைகளிடம் குறிப்பிடுவதில்லை. அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் தங்களின் பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலமாக அறிவிக்கிறார்கள்.  

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மீது வடக்கு மற்றும் தெற்கு வாழ் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் இவர் சிறந்த தீர்வை பெற்றுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை காணப்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது மனோகனேஷன் போன்றவர்கள் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து முன்னேற்றகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. தற்போது அரசியல் கைதிகளின் நலன் விரும்பிகளை போன்று நாடகமாடுகிறார். இவர்களின் செயற்பாடு அரசியல் கைதிகளின் விடுதலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மன்னார் மாவட்டத்தில் இந்துக்களின் சின்னங்கள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. பிள்ளையார் சிலை இருந்த இடத்தில் அந்தோனியாரின் சிலை பலவந்தமான முறையில் வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு சில அருட்தந்தையர்கள் சண்டியர்களை போல் செயற்படுவதை காண முடிகிறது. 

இவ்வாறான சம்பவம் குறித்து மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை அவதானம் செலுத்த வேண்டும். வடக்கில் புத்த பெருமானின் சிலை வைக்கப்பட்டதும் போர் கொடி தூக்கும் தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் மௌனம் காப்பது வேடிக்கையாகவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முக்கியமான தீர்மானங்களின் போது நபர்கள் தொடர்பில்...

2024-10-14 01:58:57
news-image

கொழும்பில் பிரபல வர்த்தகர் ரணில் விலத்தரகே...

2024-10-14 01:41:54
news-image

தேர்தல் செலவு அறிக்கையை கையளிக்காத ஜனாதிபதி...

2024-10-13 23:39:33
news-image

தேர்தலில் போலித் தமிழ்த்தேசியவாதிகளையும் போதை வியாபாரிகளையும்...

2024-10-13 19:23:46
news-image

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு; இளைஞன் படுகாயம்

2024-10-13 19:17:35
news-image

சீரற்ற காலநிலை – கொழும்பு கம்பஹா...

2024-10-13 18:48:40
news-image

களுவாஞ்சிக்குடியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில்...

2024-10-13 18:37:55
news-image

அம்பாறையில் தமிழ் மக்களின் வாக்கினை சிதைக்க...

2024-10-13 18:58:57
news-image

ஆட்சியமைக்கின்ற அரசாங்கத்துடன் பேரம் பேசி செயற்படுவோம்...

2024-10-13 18:19:20
news-image

வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார்வையிடச் சென்றவர்...

2024-10-13 18:31:19
news-image

மாதம்பையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2024-10-13 18:59:29
news-image

கடும் மழை காரணமாக கட்டான பிரதேச...

2024-10-13 19:00:52