பதுளை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றினால் ஆரம்பம் முதல் 21.9.2021 இன்று வரையிலான காலப்பகுதியில் 376 உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட் 19 தடுப்பு செயலனியினர் தெரிவித்தனர்.

பதுளை, மொனராகலையில் 838 கொரோனா தொற்றாளர்கள் - 14 மரணங்கள் பதிவு | Virakesari .lk

இதனடிப்படையில் 24 ஆயிரத்து தொளாயிரத்து பத்து பேர் 24910 கோவிட் 19 தொற்றாளர்களாக, உரிய சிகிச்சை நிலையங்களிலும் தத்தம் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இத்தொற்றாளர்களுடன் தொடர்புகளைப்  பேணியிருந்த 4582 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

பதுளை - 48 பேர்,

பண்டாரவளை - 46 பேர்,

எல்ல - 09 பேர்

ஹல்துமுள்ளை -16 பேர்

ஹாலிஎல - 44 பேர்

ஹப்புத்;தளை -29பேர்

கந்தகெட்டிய - 04 பேர்

லுணுகலை – 11 பேர்

மகியங்கனை - 41 பேர்

மீகாகியுல – 08 பேர்

பசறை – 29 பேர்

வெலிமடை  - 51 பேர்

என்ற வகையில் மாவட்டத்தின் 15 பிரதேச செயலகப்பிரிவுகளில் 376 உயிரிழப்புக்கள் இதுவரையில் நிகழ்ந்துள்ளன.

இவ் உயிரிழப்புக்களைப் பொறுத்தவரையில் நாட்டில் பதுளை மாவட்டம் நன்காம் இடத்தில் இருந்து வருவதும் புள்ளி விபரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் தந்போதைய நிலையில் கோவிட் 19 உயிரிழப்புக்களும். தொற்றாளர்களும் பெருமளவில் அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டுவருவதாக பதுளை மாவட்ட சுகாதார சேவைப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் வெலிமடை , பதுளை, பண்டாரவளை, ஹாலிஎல, மகியங்களை போன்ற பிரதேச செயலாகப் பிரிவுகளில் கோவிட் 19 தொற்று உயிரிழப்புக்களும், தொற்றாளர்கள்  வெகுவாக அதிகரித்துள்ளமை காணக்கூடியதாகவுள்ளது.