(எம்.மனோசித்ரா)

செயலூட்டி (பூஸ்டர்) தொடர்பில் பேசப்படுகிறது. அவ்வாறு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டால், முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் மட்டுப்படுத்தப்படும். 

எனவே இனியும் தாமதிக்காது சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்வதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். எனினும் சுகாதார தரப்பினருக்கு முழு நேரத்தையும் இதற்காக மாத்திரம் செலவிட முடியாது. 

அவ்வாறான நிலைமையில் எதிர்காலத்தில் தற்போதுள்ளதைப் போன்று எதிர்வரும் காலங்களில் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுப்பதற்கு பதிலாக குறிப்பிட்டவொரு நிலையத்தில் மாத்திரம் அதனை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அவற்றிலும் எந்தளவு நேரத்தை ஒதுக்க முடியும் என்று ஸ்திரமாகக் கூற முடியாது. 

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் முன்னரைப் போன்று மக்கள் ஒன்று கூடுதல், ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தல், பேரணிகள் செல்லுதல், கடைகளில் ஒன்று கூடுதல், உற்சவங்கள் வைபங்களுக்காக ஒன்று கூடுதல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகள் ஊடாகவும் கொவிட் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இதன்போது தற்போதுள்ளதைவிடவும் அபாயம் மிக்க பிறழ்வுகள் நாட்டுக்குள் நுழைந்து அதன் மூலம் தொற்று பரவல் தீவிரமடைவதற்கும் வாய்ப்புள்ளது.

இவ்வனைத்து விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி திட்டமிட்ட வேலைத்திட்டங்கள் ஊடாக அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.