கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றொரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்க போதுமான இடங்களை வென்றுள்ளார்.

எவ்வாறாயினும், பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான 170 இடங்களை வெல்வது என்ற இலக்கை ட்ரூடோ அடையவில்லை.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:30 மணி நிலவரப்படி, லிபரல் வேட்பாளர்கள் பாராளுமன்றில் 158 ஆசனங்களை பிடித்துள்ளனர்.

கனேடிய பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சி பெரும்பான்மையை வெல்ல 338 இடங்களில் 170 இடங்களைப் பெற வேண்டும்.

கனடாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி வெற்றிபெற்றுள்ள போதிலும் பெரும்பான்மையை பெறத் தவறியுள்ளது.

May be an image of 5 people and text that says 'Canada's 2021 election results LIBERAL CONSERVATIVE BLOC QUÉBÉCOIS 158 seats 32.2% of vote 119 seats 34.0% of vote 34 seats 7.7% of vote NDP GREEN 25 seats 17.7% of vote 2 seats 2.3% of vote Source: Elections Canada BBC'

பெரும்பான்மையைப் பெறுவதற்கு 170 ஆசனங்கள் அவசியம் என்ற நிலையில் லிபரல் கட்சிக்கு 158 ஆசனங்களே கிடைத்துள்ளன. அதேவேளை, கென்சவேர்ட்டிவ் கட்சிக்கு 119 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

May be an image of 2 people, people standing and text that says 'iberal D. FORE FOR L YARD. FORE AVANCONS ENSEMBLE'

“ கனடா மக்கள் முற்போக்கான திட்டமொன்றை தெரிவு செய்துள்ளனர். உங்களுக்காக போராடும் உங்களுக்கானவற்றை செய்யும் அரசாங்கத்தை நீங்கள் தெரிவு செய்துள்ளீர்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

May be an image of 2 people, beard and people standing

கனடாவின் நான்காவது கொரோனா அலைக்கு மத்தியில் இடம்பெற்ற இந்தத் தேர்தலே கனடாவின் வரலாற்றில் மிகவும் செலவுமிக்க (சுமார்  470 மில்லியன் அமெரிக்க டொலர்கள்)  தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

May be an image of 1 person

இதேவேளை, கென்சவேர்ட்டிவ் கட்சித் தலைவர் எரின் ஓடுல், இந்தத் தேர்தலை நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கும் நடவடிக்கை என்பதுடன் 600 மில்லியன் செலவில் நாட்டில் ஆழமான பிளவுகளின் மத்தியில் கனடா மக்கள் ட்ரூடோவிற்கு மற்றுமொரு சிறுபான்மை அரசாங்கத்தை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.