தலிபான்கள் பிரதி அமைச்சர்கள் பெயர் பட்டியலை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற புதிய மாநாட்டில் இந்த பட்டியலை அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் வழங்கினார்.

Taliban spokesperson Zabihullah Mujahid defended the expansion of the cabinet. (File Photo)

ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் நடத்தையுடன் அதன் அங்கீகாரம் இணைக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச எச்சரிக்கை இருந்தபோதிலும், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட இந்த பட்டியலில் பெண்கள் எவரும் உள்வாங்கப்படவில்லை.

முஜாஹித் அமைச்சரவையின் விரிவாக்கத்தை பாதுகாத்தார், அதில் ஹசாராஸ் போன்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவதாகக் கூறினர். 

பெண்கள் பின்னர் சேர்க்கப்படலாம் என்று முஜாஹித் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தலிபான்கள் செப்டம்பர் 7 ஆம் திகதி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்ய இடைக்கால அமைச்சரவையை அறிவித்தனர்.

இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால், அதன் நிறுவன உறுப்பினர் மொஹமட் ஹசன் அகுந்த் அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என்று கூறினார். 

அத்துடன் அவர்கள் பயங்கரமான ஹக்கானி வலையமைப்பின் பல தலைவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தினர்.