தரவுகளின் குளறுபடி குறித்து உண்மையை வெளிப்படுத்தவும் - சபையில் சஜித்

By Vishnu

21 Sep, 2021 | 12:49 PM
image

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுககளின் குளறுபடிகள் குறித்து உண்மையை வெளிப்படுத்துமாறு சஜித் பிரேமதாச சபையில் அழைப்பு விடுத்துள்ளார். 

பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பில் முன்னணிக் கடமைகளை நிறைவேற்றகின்ற தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள், சுகாதார பாதுகாப்பு தொடர்பிலான தீர்மானமிக்க காலப்பகுதியில் காணாமல் போனமை பாரதூரமான நிலைமையை உருவாக்குவதற்குக் காரணமாக அமையலாம் என்றும் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல் போனமை மற்றும் அதன் முழுப் பொறுப்பையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநரின் தவறு எனத் தெரிவித்து அதனை நலினப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான அவதானமிக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right