தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதியொருவரை இனந்தெரியாத நபர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

குறித்த சம்பவம் பண்டாரவளை - அம்பேதன்டகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக, பண்டாரவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் குறித்த யுவதி தனிமையிலிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் யுவதியை துஷ்பிரயோகம்  செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில், பெற்றோர் வீடு வந்தபோது தனக்கேற்பட்ட நிலையினை குறித்த யுவதி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதி தற்போது பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், யுவதி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை வைத்திய பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

யுவதியை துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபரைத் தேடி, பண்டாரவளை பொலிஸார்   தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.