தீதும் நன்றும் பிறர் தர வாரா

Published By: Digital Desk 2

21 Sep, 2021 | 12:47 PM
image

சுபத்ரா

தற்போதைய அரசாங்கத்துக்கு யார்யாரெல்லாம் பலமாக இருந்தார்களோ, ஆட்சிக்கு வர காரணமாக அமைந்தார்களோ, அவர்களெல்லாம்எதிர்த்து நிற்கின்ற நிலை தற்போது உருவாகியிருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணைவிவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித்துடன் தொடங்கிய முரண்பாடு பின்னர், விமல்வீரவன்ச, உதய கம்மன்பிலவுடன் நீடித்து, முருத்தெட்டுவே ஆனந்த தேரர் என இந்த அரசாங்கத்தைஆட்சிக்கு கொண்டு வந்தவர்கள் பலர் அதனை எதிர்க்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.

அதுபோலவே அரசாங்கத்தின்,குறிப்பாக ராஜபக்ஷவினரின் பலமாக கருதப்படுகின்ற, பலரே அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும்காரணமாகிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறானவர்களில் ஒருவர் தான் லொஹான்ரத்வத்த. 

ராஜபக்ஷவினருக்கு மிகநெருக்கமானஅவர் அனுராதபுர சிறைச்சாலைக்குள், தனது நண்பர்களுடன் மதுபோதையில் நுழைந்து, தமிழ் அரசியல்கைதிகளை மண்டியிடச் செய்து, தலையில் துப்பாக்கியை வைத்து கொலை செய்துவிடுவேன் என்று அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தமது காலணிகளைநாக்கினால் நக்கி சுத்தம் செய்யுமாறு அவர்கள் அச்சுறுத்தினர் என்று முன்னாள்அரசியல் கைதியும், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் அமைப்பாளருமான கோமகன் தகவல்வெளியிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைநடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு முறையிட்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right