இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி ரீ.பி.வீரசூரிய ஜனாதிபதியிடம் அறிக்கையினை கையளித்ததுடன் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ், ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.நெவில் குருகே ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.