கார்வண்ணன்

“அரசாங்கம், ஐ.நா.வின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை, அதன் கோட்பாடுகளுக்கமைய செயற்படுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது”

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடந்து வருகின்ற நிலையில், ஐ.நா. தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் குழப்பமான நிலைப்பாடுகள் வெளிவந்திருக்கின்றன.

ஐ.நா.வுடன் இலங்கை அரசாங்கம் இணங்கிச் செயற்படவுள்ளதா அல்லது அதனுடன் முரண்பட்டுக் கொள்ளவுள்ளதா என்ற கேள்வி இதனால் எழுந்திருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஷ் குணவர்த்தன, சர்வதேச விவகாரங்களில் போதிய வினைத்திறனுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.

அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணங்க முடியாது என்று, அவரே ஜெனிவாவுக்கு அறிவித்திருந்தார்.

அது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தாலும், அதனை வெளிப்படுத்தியவர் தினேஷ் குணவர்த்தன தான்.

இந்தநிலையில், உள்நாட்டு நெருக்கடிகள் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச நெருக்கடிகளைச் சமாளிக்க பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக்கப்பட்டார்.

அவர் பதவியேற்ற கையுடன், சர்வதேச சமூகத்துடனான ஊடாடல்களை அதிகளவில் மேற்கொண்டிருந்தார். வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தார், வெளிநாடுகளில் உள்ள அமைச்சர்களுடன் தொடர்பு கொண்டு பேசினார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.