சட்டவிரோதமாக 100 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தமிழகத்துக்குள் நுழைந்ததாக தகவல்

Published By: Vishnu

21 Sep, 2021 | 11:38 AM
image

தூத்துக்குடி கடற்கரை வழியாக 100 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் அண்மைய நாட்களில் இந்தியாவை வந்தடைந்துள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேற்ற மோசடியில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக தமிழ்நாடு கியூ பிரிவு காவல்துறையினரின் அறிக்கைகளை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையர்கள் தூத்துக்குடிக்கு ஐந்து குழுக்களாக உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட படகுகளில் வருகை தந்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை அடைந்தவர்களில் பெரும்பாலானோர் கர்நாடகாவில் உள்ள மங்களூரு வழியாக வேறு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தூத்துக்குடி பாதை வழியாக இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறுவதற்கு முக்கிய சூத்திரதாரியாக கருதப்படுகிறார். 

இந் நிலையில் தமிழகக் கடலோரப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் மேலும் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கில் இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர் கடற்பரப்புகளிலும், கடலோர நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த மார்ச் மாத இறுதியில் கேரள கடற்கரைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை படகென்றை இந்திய கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது 3,000 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை கடலோர காவல்படையினரும் தேசிய புலனாய்வுப் பிரிவினரும் பறிமுதல் செய்தனர்.

சம்பவத்தில் ஆறு இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், படகிலிருந்து ஐந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் 90 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46