சத்ரியன்

“அரசாங்கத்தின் அணுகமுறைகள் தான் நாட்டின் தற்போதைய நிலைமைக்குகாரணம். அதற்காக அரசாங்கத்தை மாற்றிக் கொள்வது மட்டும் இந்த நெருக்கடிக்கு தீர்வாகஅமையப் போவதில்லை”

 கொரோனா தொற்றுக்கும், பொருளாதார நெருக்கடிகளுக்கும் மத்தியில் நாடுகடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில்சர்ச்சைக்குரிய அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார்.

நாட்டை நிர்வகிப்பதில் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் பதவி விலகிஉடனடியாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் விடுத்திருந்த அந்த அழைப்பு,பொறுப்புவாய்ந்த ஒரு அரசியல் தலைவராக அவரால் இருக்க முடியுமா என்ற கேள்விகளைஎழுப்பச் செய்திருக்கிறது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் நாடு மோசமான நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கிறது. 

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளால், மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்கு சாதாரண மக்கள்தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  

வரிசையில் நிற்கின்ற நிலை, பொருட்களை பெற முடியாத நிலை, கூடுதல்விலைக்கு பொருட்களை வாங்க வேண்டிய நிலை என்று பிரச்சினைகள் அவர்கள் முன் புதிது புதிதாகமுளைத்துக் கொண்டிருக்கிறது.

உள்ளாடையைக் கூட ச.தொ.ச.வில் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலையைஅரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தியாகங்களைச் செய்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அழைப்புவிடுக்கும் ஜனாதிபதி, இனிமேல் இரண்டு வேளை மட்டும் சாப்பிடுங்கள் என்று அறிவுரைகூறும் அமைச்சர், என்று இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை வேகமாக இழந்துகொண்டிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-19#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.